நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்கு பேரழிவு: மன்மோகன்சிங் சாடல்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவுதான் ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நடத்திய இந்த செய்தியாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது தொடக்கத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விவரித்தார். அப்போது தாம் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கமாட்டேன் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நரேந்திர மோடி பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடி குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துகள்:
நாட்டின் அடுத்த பிரதமரையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் தேர்ந்தெடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவுதான் ஏற்படும். என்னைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்வதைப் போல நான் பலவீனமான பிரதமர் அல்ல.
என்னைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியைப் போல ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கியவன் அல்ல. அகமதபாத் தெருக்களில் அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்ய அனுமதித்தது தமது திறமை என மோடி நம்பிக்கைக் கொண்டிருக்கிறார். அதையெல்லாம் ஏற்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் பிரதமராவதை நாடும் விரும்பாது. நரேந்திர மோடி பிரதமராகும் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications