"தங்கமகன்" மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18-ந்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

தங்கம் வென்ற மாரியப்பன்
இந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் 4,300 வீரர், வீராங்கனைகள் 23 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார்.

வெண்கலம் வென்ற வருண்சிங்
அவருடன் பாடி வருண் சிங் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தையும் வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் எதுவும் வெல்லவில்லை.

சேலத்தை சேர்ந்தவர்..
ஆனால் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு. மாரியப்பன் தங்கவேலு தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர்.

விபத்தில் காலை இழந்தவர்..
விபத்து ஒன்றில் காலை இழந்த நிலையிலும் சோர்ந்து போகாமால் இந்த சரித்திர சாதனை படைத்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
மோடி வாழ்த்து
பிரதமர் மோடி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்தை வெளியிட்டிருக்கிறார். அதில், பதக்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள மாரியப்பன் தங்கவேலு, வருண்சிங் ஆகியோருக்கு பாராட்டு என கூறியுள்ளார் பிரதமர் மோடி.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications