அரசியல் லாபத்துக்காக அனைத்து எல்லைகளையும் மோடி கடந்துவிட்டார்: சோனியா குற்றச்சாட்டு
லக்னொ: அரசியல் லாபத்துக்காக மோடி அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டதாக சோனியாகாந்தி குற்றம்சாட்டினார். உத்தர பிரதேச மாநிலம் குசிநகரில் இன்று நடந்த காங்கிஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி,
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது தீவிரவாதத்தால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை பார்த்து தீவிரவாதத்தை எதிர்ப்பதில் தோல்வியடைந்துவிட்டதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ராணுவத்தில் ஒரே ரேங்க், ஒரே பதவி என்ற திட்டம், ஐக்கிய முற்போக்கு கூட்ட ணி அரசில்தான் கொண்டுவரப்பட்டது.

அரசியல் லாபத்துக்காக மோடி அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டார். முன்னாள் பிரதமரான ராஜிவ்காந்தியையே இழிவுபடுத்திவிட்டார். நாட்டின் பிரதமராக கனவு காண்பவர் அதன் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.
உலக பொருளாதார நிலைமை இவ்வளவு சீர்கெட்டுள்ளபோதிலும் இந்தியா மட்டும் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை பிற நாடுகள் உற்றுபார்த்துக் கொண்டுள்ளன. காங்கிரஸ் கட்சிதான் ஏழை, எளியவர்களை பற்றி எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வீட்டு உரிமை, சுகாதார உரிமை, ஓய்வூதிய உரிமை சட்டங்களை கொண்டுவருவோம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications