போட்டி போட்டு சோனியாவும், ராகுலும் புளுகுகிறார்கள்.. மோடி தாக்கு!

Subscribe to Oneindia Tamil

மதுவா, குஜராத்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் போட்டி போட்டுக் கொண்டு பொய்களை பேசி வருகிறார்கள் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த தேர்தல் பிசராரக் கூட்டத்தில் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் மோடி.

பிசாரத்தின்போது மோடி பேசியதாவது....

மாறி மாறி பொய்

மாறி மாறி பொய்

குஜராத் வளர்ச்சி குறித்து மாறி மாறி பொய்யாக பேசி வருகிறார்கள் சோனியாவும், ராகுலும்.

நல்லா போடுறாங்கப்பா போட்டி

நல்லா போடுறாங்கப்பா போட்டி

இருவரும் பொய்களைச் சொல்வதில் நன்கு போட்டி போடுகிறார்கள்.

அம்மா ஒன்று சொன்னால்.. மகன் 2 பொய் சொல்கிறார்

அம்மா ஒன்று சொன்னால்.. மகன் 2 பொய் சொல்கிறார்

தாயார் ஒரு பொய் சொன்னால் மகன் 2 பொய் சொல்கிறார். மகன் 2 சொன்னால் தாயார் 3 சொல்கிறார்.

என்னைத் திட்டாமல் அவர்களுக்குச் செரிக்காது

என்னைத் திட்டாமல் அவர்களுக்குச் செரிக்காது

எனது பெயரைச் சொல்லி விமர்சிக்காமல் போனால் சாப்பிட்ட சாப்பாடு அவர்களுக்குச் செரிக்காது.

யாருமே எதிர்க்கலையே

யாருமே எதிர்க்கலையே

கடந்த 60 காலமாக இவர்களது ஆட்சியை, இவர்களது கட்சியை இப்படி துணிச்சலுடன் எதிர்க்க யாரும் வரவில்லை. நான் வந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

படேல் தேசாய்

படேல் தேசாய்

சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் ஆகியோரை ஏதோ கத்திரிக்காய், உருளைக்கிழங்கு மாதிரி அவர்கள் தூக்கிப் போட்டு விட்டனர். இப்போது ஒரு டீ வியாபாரியைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.

தம்பி ராகுல் அப்பா சொன்னது ஞாபகமிருக்கா...

தம்பி ராகுல் அப்பா சொன்னது ஞாபகமிருக்கா...

ராகுல் தம்பி, உங்களது தந்தை ராஜீவ் காந்தி முன்பு பிரதமராக இருந்தபோது சொன்னார்.. மத்திய அரசு ஒரு ரூபாயை கொடுத்தால் அது கடைசியில் பயனாளிகளிடம் போகும்போது 15 பைசாவாக சுருங்க விடுகிறது என்று. அப்போது பெரும்பாலான மாநிலங்களில், ஏன் குஜராத்தில் கூட காங்கிரஸ்தானே ஆட்சியில் இருந்தது. எங்கு பார்த்தாலும் காங்கிரஸ் அரசுதானே, பாஜக சீனிலேயே இல்லையே..அப்படியானால் பணத்தை சாப்பிட்டது யார்... என்றார் மோடி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+