ஐஸ்.. ஐஸ்.. மோடி ஐஸ்.. 50% ஆஃபர்.. போனா வராது.. சூரத்தை கலக்கும் மோடி முகம் பதியப்பட்ட குல்ஃபி!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஐஸ்க்ரிம் பார்லர் ஒன்றில் விற்பனை செய்யப்படும் மோடி குல்ஃபி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளரான பிரதமர் மோடி நாளை நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார். நேரு, இந்திராகாந்தியை தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.

கொண்டாட்டம்
இதற்கான பதவியேற்பு விழா நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது. பாஜகவின் வெற்றியை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

மோடியின் முகம்
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் இயங்கி வரும் ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்று மோடியின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடி வருகிறது. அதாவது பாஜகவின் பிரமாண்ட வெற்றியை முன்னிட்டு மோடியின் முகம் அமைக்கப்பட்ட குல்ஃபியை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

24 மணிநேரம் செலவு
முழுக்க முழுக்க 100% இயற்கை பொருட்களால் அந்த குல்ஃபிக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்பெஷல் குல்ஃபியின் 200 பீஸ்களை உருவாக்க 24 மணிநேரம் ஆனதாக ஐஸ்க்ரீம் பார்லரின் உரிமையாளர்ர் விவேக் அஜ்மிரா தெரிவித்துள்ளார்.

50% ஆஃபர்
இந்த ஸ்பெஷல் குல்ஃபி மே 30 ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கும் வரைதான் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மோடி சிட்டாபல் குல்ஃபி என பெயரிடப்பட்டுள்ள இந்த குல்ஃபி 50 சதவீத ஆஃபரில் விற்பனை செய்யப்படுகிறது.

மோடி தினம்
மோடியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மோடி பதவியேற்கும் வரை இலவச சேவை அறிவித்துள்ளார். மோடி பிரமாண்ட வெற்றி பெற்ற மே 23ஆம் தேதியை மோடி தினமாக அறிவிக்க வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications