"வாத்தியார்" அத்வானிக்கு டிவிட்டரிலும், நேரிலும் "ஹேப்பி பர்த்டே" சொன்ன மோடி!
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி மிகச் சிறந்த ஆசிரியர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இன்று அத்வானி பிறந்த நாள் என்பதால் அவருக்கு இவ்வாறு புகழாரம் சூட்டினார் பிரதமர்.
மேலும் அத்வானி வீட்டுக்கு நேரில் சென்றும் பிறந்த நாள் வாழ்த்து கூறி வாழ்த்தினார் மோடி.
இதுகுறித்து மோடி வெளியிட்டிருந்த டிவிட்டில், தனிப்பட்ட முறையில் நான் அத்வானியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எங்களைப் போன்ற கார்யகர்த்தாக்களுக்கு, அவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர், சுயநலமில்லாமல் செயல்படும் சேவையாளர் என்று கூறியிருந்தார் மோடி.

இன்று அத்வானியின் 88வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி பல்வேறு பாஜக தலைவர்களும் அத்வானிக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகின்றனர். முதலில் பீகார் தேர்தலில் பாஜக வெல்வதாக வந்த செய்தி்களால் அத்வானியை உற்சாகத்துடன் வாழ்த்தி வந்தனர் பாஜகவினர். ஆனால் நிலைமை தலைகீழாக மாறிப் போனதால் தற்போது பாஜக வட்டாரம் பெரும் ஏமாற்றமடைந்து விட்டது.
கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையில் பாஜ்க ஆட்சியைப் பிடித்த பிறகு அமைதியாகி விட்டார் அத்வானி. முன்புபோல அவர் தீவிரமாக செயல்படுவதில்லை, பேசுவதில்லை. ஏன் எங்குமே போவதில்லை. அவரைப் போலவே பிற மூத்த தலைவர்களும் முடக்கப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications