இரண்டாவதும் பெண் குழுந்தை.. விரக்தியில் 4 மாத குழந்தையை 17 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தாய்!
ராஜஸ்தான்: இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், பெற்ற தாயே 4 மாதம் ஆன அந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேரந்தவர் நேஹா கோயல்(35). இவருக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது ஆண் குழந்தை கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பல ஜோசியர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையில் சில பூஜைகளும் வீட்டில் செய்துள்ளார். ஆண் குழந்தையை பெறும் முறைகள் குறித்து பல்வேறு இணையதளங்களிலும் நேஹா தேடியுள்ளார். ஆனால் அவருக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த வெறுப்பில் பிறந்து 4 மாதங்களே ஆன அந்த பெண் குழந்தையை இரக்கமின்றி சமையல் கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார் நேஹா. கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், நேஹா வீட்டில் பழுதாகிக் கிடைந்த ஏசியின் உள்ளே அக்குழந்தையின் உடல் கத்தியில் குத்தப்பட்டு கிடந்தது. அக்குழந்தையின் தாயான நேஹா கோயல், சமையல் கத்தியால் குழந்தையை குத்திய காயங்கள் 17 இடங்களில் இருப்பதும் தெரிய வந்தது. இதற்காக, நேஹாவை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, ஜெய்ப்பூர் போலீஸ் அதிகாரி அங்ஷூமன் போமியா கூறுகையில், ஆண் குழந்தை வேண்டும் என விரும்பியவருக்கு இரண்டாவது குழந்தையாக பெண் பிறந்தது நேஹாவிற்கு பிடிக்கவில்லை. இதனால், அவர் ஏற்கெனவே ஒருமுறை அக்குழந்தையின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குழந்தை உயிர் பிழைத்துள்ளது எனக் கூறினார். இச்சம்பவம் அறிந்த கோயல் கணவர் மற்றும் அக்கம்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications