ம.பியில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பாஜக வழக்கு.. நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லி: மத்திய பிரதேச சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கு பதில் அளிக்குமாறு கமல் நாத் மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 பேருடன் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அதன்பிறகு 6 அமைச்சர்கள் உள்பட 22 பேரும் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசின் பலம் மொத்தம் உள்ள 230 இடங்களில் 99 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் பாஜகவின் பலம் 107 ஆக உள்ளது.

இதன் காரணமாக பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். இதன்படி நேற்று ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி நேற்று சட்டசபை 26ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி பாஜக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மெஜாரிட்டி இல்லாததால் கமல்நாத்துக்கு முதல்வராக நீடிக்க ஒரு நிமிடம் கூட தகுதி இல்லை. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் நேற்று எம்எல்ஏக்களுடன் முறையிட்டார். இதையடுத்து இன்றைக்குள் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இன்றைக்குள் சட்டசபையில் கட்டாயம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் லால்ஜி டாண்டன் கெடு விதித்துள்ளார்.
இது ஒருபுறம் எனில் மத்திய பிரதேச சபாநாயகருக்கு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜகவின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு முதல்வர் கமல் நாத் மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அத்துடன் வழக்கை நாளை விசாரிப்பதாக தள்ளி வைத்தது. இதனால் நாளை முடிவு தெரிந்துவிடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications