வரி கட்டுறேன்.. அதனால் கேட்கிறேன்.. ஜார்க்கண்டில் மின்தட்டுப்பாடு ஏன்?.. தோனி மனைவி சாக்ஷி ட்வீட்
ராய்ப்பூர்: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி ஜார்க்கண்ட் மாநில மின் வெட்டு குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவு கை கொடுப்பது அனல் மின் நிலையங்கள்தான். இந்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை ஆகும்.
நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்த மூன்று மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன. தமிழகத்தில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி முதல் நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் பாதிக்கும் மேல் இறக்குமதி நிலக்கரியை நம்பியே உள்ளன.

நெய்வேலி
எஞ்சிய அனல்மின் நிலையங்களுக்கு நெய்வேலி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியே ஆதாரமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி கடந்த ஆண்டு 50 முதல் 60 டாலர் வரை இருந்தது. ஆனால் ரஷ்யா உக்கைன் போரால் விலை உயர்ந்துள்ளது. தற்போது 160 டாலருக்கு விற்பனையாகிறது.

நிலக்கரி எடுக்கும் பணி பாதிப்பு
மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி தோண்டும் பணிகள் கனமழையால் நிறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில் இந்தியாவில் 12 மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்து அங்கெல்லாம் மின் வெட்டு பிரச்சினை நிலவுகிறது.

5 மணி நேரம் மின்வெட்டு
அதாவது தமிழகத்தில் 5 மணி நேரமும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 8 மணி நேரமும் மின் தடை நீடிக்கிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இனி 12 மணி நேரம் மின் வெட்டு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது.

40 டிகிரி வெப்பநிலை
பெரும்பாலான மாநிலங்களில் 40 டிகிரியை எட்டியுள்ளது வெப்பநிலை. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மணிக்கணக்கில் ஏற்படும் மின்வெட்டு குறித்து தோனியின் மனைவி சாக்ஷி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நான் சரியாக வரி செலுத்தி வருகிறேன்.

சாக்ஷி தோனி ட்விட்டரில் கேள்வி
சரியாக வரி செலுத்தும் நபர் என்ற முறையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்தனை ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இப்போது ஏன் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். நாங்கள் மின்சக்தியை சேமித்து வரும் பணியை எங்கள் பங்கிற்கு சரியாகவே செய்கிறோம் என சாக்ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications