''அண்ணே நான் ஏழாவது பாஸ்ணே.. நீங்க எஸ்எஸ்எல்சி பெயிலுண்ணே...!''

லக்னோ அருகே நடந்த கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இப்படிப் பேசினார்.
முலாயம் பேசுகையில், ரமணா விஜயகாந்த் போல ஒரு புள்ளி விவரத்தை எடுத்துக் கூறினார். அவர் சொல்லும்போது, ஜெயலலிதாவிடம் 39 தொகுதிகள் மட்டுமே உள்ளது. மம்தா பானர்ஜியிடம் 42 தொகுதிகள், நிதிஷ்குமாரிடம் 40 தொகுதிகளே உள்ளன.
ஆனால், நம்மிடம் 80 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 80 தொகுதிகளில் சமாஜ்வாடி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றால், 3வது அணிக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு எனக்கு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில் 3வது அணி சார்பில் நானே பிரதமர் ஆவேன்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளில் இல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து 3வது அணியாக ஆட்சி அமைக்கும். 3வது அணியில் சமாஜ்வாடி கட்சி இடம் பெறாமல் நிச்சயமாக ஆட்சி அமையாது. சமாஜ்வாடி கட்சியை தவிர்த்து விட்டு யாரால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்? சமாஜ்வாடி பங்களிப்பு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications