தண்ணீர் வேண்டுமா?: தமிழக கூலித் தொழிலாளர்கள் மீது கேரளாவில் தாக்குதல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து கேரளாவில் கூலி வேலை செய்யும் தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மகிழ்ச்சியையும், கேரளாவுக்கு வருத்தத்தையும் அளித்துள்ளது. தீர்ப்பு வெளியானதில் இருந்து கேரளாவில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
மேலும் கேரளாவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டாவில் தங்கி கூலி வேலை செய்து வரும் தமிழக தொழிலாளர்களை சிலர் தாக்கியுள்ளனர். உங்களுக்கு தண்ணீர் வேண்டுமோ என்று கேட்டுக் கொண்டே தாக்கியுள்ளனர்.
இது குறித்து தென்காசியைச் சேர்ந்த மிகாவேல் என்பவர் கூறுகையில்,
நான் 9 ஆண்டுகளாக கேரளாவில் தங்கி கட்டிட கூலி வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் பல தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள். நாங்கள் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் எந்த பயலும் இங்கு இருக்கக் கூடாது, அனைவரும் ஓடுங்கள் என்று கூறி எங்களை தாக்கினார்கள். நாங்கள் அடியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அமைதியாக சென்றோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications