முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேரளா புதிய மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு புதியதாக மனுத்தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் 141 அடி அளவுக்கு நீர் தேக்கப்பட்டுள்ளது. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை தொடர்வால் நாளை அல்லது திங்கள்கிழமைக்குள் 142 அடியை எட்டிவிடும் நிலை உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கேரளா பகுதிளில் பலத்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கேரளா அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூடியது. இந்தக் கூட்டத்தில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ்சால்வே உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு சார்பில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், அணையின் மதகுகளில் 2 பழுதடைந்துள்ளன.
இந்த நிலையில் அதிகளவு நீரைத் தேக்காமல் 136 அடி அளவுக்கே அணையில் நீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications