மேகி நூடுல்ஸை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை ஹைகோர்ட் அனுமதி
மும்பை: மேகி நூடுல்ஸை வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்ய நெஸ்லே நிறுவனத்திற்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேகி நூடுல்ஸுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து பல கோடி மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே சந்தையில் இருந்து வாபஸ் பெற்று அவற்றை அழித்தது.

இந்நிலையில் நூடுல்ஸுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம் கேட்டிருந்தது.
ஆணையமும் மேகிக்கு தடை விதித்தது குறித்த விளக்கத்தை 60 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக சமர்பித்தது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேகி நூடுல்ஸை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கோரிய நெஸ்லேவின் கோரிக்கையை ஏற்றுள்ளது.
மேகி நூடுல்ஸில் பிரச்சனை இல்லை என்றால் எதற்காக அதை நெஸ்லே நிறுவனம் அழித்துள்ளது என்று அரசு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி கூறுகையில், மேகி நூடுல்ஸை ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனத்திற்கு உரிமை உள்ளது என்றார்.
வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications