நள்ளிரவில் நிர்வாணப் பூஜை: ராதே மா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
மும்பை: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா மீது பிரபல டி.வி. நடிகை டோலி பிந்த்ரா அளித்த புகாரையடுத்து, அவர் மீது மும்பை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவில் நிர்வாண பூஜை நடத்தியதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் டிவி நடிகை அளித்த புகாரில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
கையில் சூலாயுதம், லிப்ஸ்டிக், ஜிகு ஜிகு உடைகள் அணிந்து கொண்டு ஆசிர்வாதம் செய்வது... அரை டவுசர்-டி-ஷர்ட்டுடன் ஃபேஸ்புக்கில் ஒய்யாரமாக போஸ் கொடுப்பது என பரபரப்பை ஏற்படுத்தினார் பெண் சாமியார் ராதே மா. இவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளது மும்பை போலீஸ்.
இந்த நிலையில் இவரது தீவிர பக்தையாக இருந்து வந்த டோலி பிந்த்ரா (45) தனக்கு குழந்தை வரம் அருள்வதாக வாக்குறுதி அளித்திருந்த ராதே மாவின் மீது மும்பை போலீசாரிடம் கடந்த வாரம் திடுக்கிடும் புகார் தெரிவித்திருந்தார். பிக் பாஸ் தொடரில் தோன்றியதன் மூலம் பிரபலமடைந்த டோலி பிந்த்ரா(45), சில பாலிவுட் நாடகங்களிலும், சினிமாக்களிலும் நடித்துள்ளார். அவர் தனது புகரில் ராதே மா பற்றிய ரகசியங்களையும் வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு பூஜை
நள்ளிரவு நேரங்களில் நடைபெறும் ‘சத்சங்' நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு ராதே மா, தன்னை வற்புறுத்தியதாகவும் ‘செக்ஸ் பார்ட்டிகள்' போல நடைபெற்ற அந்த சத்சங் நிகழ்ச்சிகளின்போது, தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் மும்பை போலீசாரிடம் அளித்த புகாரில் டோலி பிந்த்ரா தெரிவித்திருந்தார்.

குழந்தை வரம்
ஆண் பக்தர்களுடன் பேசும்போது, பஞ்சாபி மொழியில் ஆபாசமாக சங்கேத பாஷையில் பேசும் பழக்கம்கொண்ட ராதே மா, தனது கணவரையே அபகரிக்க முயன்றதாகவும் அந்தப் புகாரில் டோலி பிந்த்ரா குறிப்பிட்டிருந்தார்.

தயக்கம் காட்டியது ஏன்?
ராதே மா மீது இதுவரை ஏன் புகார் தெரிவிக்காமல் இருந்தீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பிந்த்ரா, எனக்கு நீண்ட காலமாக பிள்ளை பாக்கியம் கிட்டவில்லை. எனக்கு குழந்தை பிறக்க வழிசெய்கிறேன் என ராதே மா வாக்குறுதி அளித்திருந்ததால் அவர் மீது புகார் கூற நான் தயக்கம் காட்டி வந்தேன் என்று தெரிவித்தார்.

கொலை மிரட்டல்
தற்போது, அவரது நிஜமுகத்தை நான் வெளிப்படுத்தி விட்டதால், போலீசில் நான் புகார் அளித்த நாளில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருகின்றது எனவும் டோலி பிந்த்ரா அந்த புகாரில் கூறியிருந்தார்.

வழக்குப் பதிவு
இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294, 354, 506(2), 109, 120பி ஆகிய பிரிவுகளின்கீழ் ராதே மா மீது மும்பை போரிவில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக மும்பை வடக்குப் பகுதி கூடுதல் போலீஸ் கமிஷனர் ஃபதே சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications