பாஜகவுக்கு வாக்களித்த முஸ்லீம் பெண்.. கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்.. அதிர வைத்த சம்பவம்
இந்தூர்: பாஜகவுக்கு வாக்களித்தால் இஸ்லாமியப் பெண் ஒருவரை அவரது குடும்பத்தினரே தாக்கிய மோசமான சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை மத்தியப் பிரதேச முதல்வர் நேரில் சந்தித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானது. அங்கே பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பாஜக அங்கே ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

இதற்கிடையே தேர்தல் சமயத்தில் அங்கே நடந்த ஒரு மோசமான சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது இணையத்தில் டிரெண்டான நிலையில், அம்மாநில முதல்வர் சவுஹான் இதில் தலையிட்டுள்ளார்.
முஸ்லீம் பெண் மீது தாக்குதல்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தார் என்ற ஒரே காரணத்திற்காகச் சிலர் தாக்கியுள்ளனர். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்த பெண்ணை மோசமாகத் தாக்கியுள்ளனர். இதற்கிடையே அந்த முஸ்லிம் பெண்ணை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
சமீனா என்ற அந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த சிவராஜ் சிங் சவுஹானை சந்தித்தார். தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். பாஜகவுக்கு வாக்களித்தால் அந்த பெண் தாக்கப்பட்ட செய்தி வந்த பிறகு, அந்தப் பெண்ணை சந்திக்க சவுஹான் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது முதல்வர் சவுஹான் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாக தெரிகிறது.
மோசமான தாக்குதல்: இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், "நான் பாஜகவுக்கு வாக்களித்ததை அறிந்த எனது கணவரின் சகோதரர் ஜாவேத் என்பவர் என்னைக் கொடூரமாகத் தாக்கினார். சவுஹான் கட்சிக்கு எதற்காக வாக்களித்தாய் என்று கேட்டுத் தாக்கினார். இப்போது நான் முதல்வரைச் சந்தித்தேன். அவர் எனது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் உரிமையை எனக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
நான் எதற்காக பாஜகவுக்கு வாக்களித்தேன் என்றே கேட்டுத் தாக்கினார்கள். இப்போது சொல்கிறான் சவுஹான் எந்தவொரு தவறையும் செய்யாதவர். இதன் காரணமாகவே அவரது கட்சிக்கு வாக்களித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.
ம.பி தேர்தல் முடிவுகள்: மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. மறுபுறம் அங்கே காங்கிரஸ் கட்சியால் 66 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதன் மூலம் பாஜக அங்கே ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. அதேநேரம் தேர்தல் முடிவு வெளியாகி சுமார் ஒரு வாரம் ஆகும் நிலையில், இன்னும் முதல்வர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் ரேஸில் இருக்கிறார். அவரைத் தவிர மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் படேல், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் நரேந்திர சிங் தோமர் மற்றும் மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் முதல்வர் ரேஸில் இருக்கிறார்கள். யார் முதல்வர் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications