இந்துக்களோடு இணைந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் இஸ்லாமியர்கள்! நாட்டுக்கு வழிகாட்டும் கான்பூர்
கான்பூர்: மதக் கலவரங்களுக்கு பஞ்சம் இல்லாத உத்தர பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்கள் ஆர்வத்துடன் பங்கெடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையாகவே அதுபோன்ற மத ஒற்றுமை விழா வாசனை திரவியங்களின் நகர் என்று அழைக்கப்படும் உத்தர பிரதேசத்தின் கான்பூரில் நிகழ்கிறது.

சகோதரத்துவம்
மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெருநகரம்தான் கான்பூர். பல்வேறு மதத்தை சேர்ந்த மக்களும் கணிசமாக வாழக்கூடிய நகரம். ஆயினும், தங்களுக்குள் சகோதரத்துவத்தை எப்போதும் விட்டுக்கொடுக்காத மக்கள்தான் இங்கு உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி
கான்பூர் மக்களின் சகோதரத்துவத்துக்கு ஒரு உதாரணம்தான் விநாயகர் சதுர்த்தி பண்டிகை.

இஸ்லாமியர்கள் பங்கேற்பு
விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த பண்டிகையை இந்துக்கள் கொண்டாடும்போது, சகோதர பாசத்துடன் இஸ்லாமியர்களும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

பூஜை செய்யும் இஸ்லாமியர்கள்
இந்துக்கள் தெரு மூலைகளில் விநாயகர் சிலைகளை நிறுவி, வழிபாடு நடத்தி பிறகு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதேபோன்று கான்பூரிலுள்ள இஸ்லாமியர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தெருக்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, பூஜை, புனஸ்காரங்கள் செய்து நீர் நிலைகளில் கரைக்கின்றனர்.

மத மோதல் கிடையாது
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட்டமாக இந்துக்கள் கருதுவதைப்போல, இஸ்லாமியர்களும் ஆடல், பாடலுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்கின்றனர். இதனால் தங்களில் ஒருவர்களாகவே கான்பூர் இந்துக்கள், இஸ்லாமியர்களை பார்க்கிறார்கள். அதே நேரம் இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவர் மதத்தை மற்றவர்கள் போற்றிக் கொண்டு தங்களது வழிகளில் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர்.

ரம்ஜான் கொண்டாடும் இந்துக்கள்
வாலீத் என்ற இஸ்லாமிய வாலிபர் கூறுகையில், தீபாவளி, ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி பண்டிகைகள் எங்களுக்கு ஒன்றுதான். எங்களுக்குள் மனதளவில் கூட வேறுபாடு கிடையாது என்றார். சுபன் என்ற இந்து வாலிபர் கூறுகையில், "இந்துக்களான நாங்கள் ரம்ஜானை இதே உற்சாகத்தோடு கொண்டாடுவோம். இஸ்லாமிய நண்பர்கள், ஹோலி, தீபாவளியை கொண்டாடுவார்கள். இந்தியாவுக்கு நாங்கள் முன் உதாரணமாக இருக்கிறோம். இதே ஒற்றுமை தொடர வேண்டும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications