"விநோதம்".. திடீர்னு மண்ணில் உருண்டு கூச்சலிட்டு.. சத்தமாக அழுத மாணவிகள்.. அலறிய டீச்சர்கள்.. அய்யோ
கூச்சலிட்டு மாணவிகள் சத்தமாக அலறி அழும் வீடியோ ஒன்று பரவி வருகிறது
டேராடூன்: மாணவிகள் சத்தமாக அலறி, கூச்சலிட்டு அழுது, தலை குனிந்து, பயங்கரமாகவும், வினோதமாகவும் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி உள்ளது.. அது குறித்து முக்கிய தகவல்களும் வெளியாகி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில், ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியில் ஏராளமான மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள்..
இந்த நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ - மாணவிகள் வந்துள்ளனர்.. அப்போது திடீரென மாணவிகள் மட்டும் கூச்சலிட தொடங்கினர்.. தரையில் உருண்டும், புரண்டும் சத்தம் போட்டு அழுதனர்.. அவர்கள் எதற்காக அப்படி அழுதார்கள் என்று தெரியவில்லை.
ஆனால், அவர்களது அழுகைகளும், செயல்களும் வித்தியாசமாக இருந்தது.. மாணவிகள் விநோதமாக நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. மாணவிகளை கட்டுப்படுத்த முயன்றும், ஆசிரியர்களால் முடியவில்லை.. அதனால் பயந்து போன பள்ளி நிர்வாகம், உடனடியாக மாணவிகளின் பெற்றோருக்கு போனை போட்டு, ஸ்கூலுக்கு உடனடியாக வரவழைத்தனர்... பெற்றோர்களாலும் பிள்ளைகளை சமாதானப்படுத்த முடியவில்லை.. அதனால், பக்கத்தில் இருக்கும் சர்ச் பாதிரியாரை ஸ்கூலுக்கு அழைத்து வந்தன.. பாதிரியாரும் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.. அவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.. அப்போதும் மாணவிகளை சாந்தப்படுத்த முடியவில்லை.

கூச்சலிட்டனர்
தொடர்ந்து மாணவிகள் கூச்சலிட்டு கொண்டே இருந்தனர்.. ஒரு இடத்தில் அழ ஆரம்பித்து, அப்படியே உருண்டுக் கொண்டே பள்ளி வளாகம் முழுவதும் புரண்டனர்.. மைதானங்களிலும், வகுப்பறை வாசலிலும், அங்கும் இங்கும் உருண்டனர்... இதற்கு பிறகு, பள்ளி நிர்வாகம், மருத்துவக்குழுவினரை வரவழைத்தது.. அவர்கள் அந்த மாணவிகளை ஆய்வு செய்தனர்... அப்போதுதான், இப்படி கூச்சலிட்ட மாணவிகள் அனைவரும், ஒரு துக்க நிகழ்வில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

தோழிகள்
அதாவது, பாகேஷ்வர் மாவட்டத்தில், சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.. இதில், ஏராளமான மக்கள் வெள்ள பாதிப்பில் சிக்கி, உடைமைகளை இழந்து, வாழ்வாதாரத்தையும் தொலைத்தனர்.. பலரது வீடுகள் இடிந்து விழுந்தன.. பலர் வெள்ளத்தில் அடித்து கொண்டு போகப்பட்டனர்.. உயிரிழப்புகளையும் இந்த வெள்ளம் ஏற்படுத்திவிட்டது.. இந்த வெள்ளத்தில்தான், இதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மூழ்கி இறந்துவிட்டாராம்.. கதறி அழுதவர்கள் அனைவருமே, இறந்துபோன அந்த மாணவியின் தோழிகள்தான்..

வினோதம்
அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே இன்னும் இவர்கள் வரவில்லை என்கிறார்கள் டாக்டர்கள்... தோழியின் நினைவு வந்துவிட்டதால், வெள்ளத்தில் அடித்து கொண்டு போன நிகழ்வும் சேர்ந்து கொண்டுள்ளதால், இப்படி வினோதமாக நடந்து கொண்டுள்ளதாகவும், இது உணர்ச்சி அல்லது உளவியல் அழுத்தத்தால் தூண்டப்படும் பிரச்சினை என்றும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... உத்தரகாண்டில் பள்ளி மாணவிகள், கூச்சலிட்டு கதறி அழுத வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரான்ஸ்
மாணவிகள் கதறி அழுத வீடியோ இணையத்தில் பரவி பார்ப்போரை பதற வைத்து வருகிறது. டிரான்ஸ் பாதித்த மாணவர்கள் சிலர், இரண்டு நாட்களுக்கு முன்பும், இதே போல்தான் நடந்து கொண்டார்களாம்.. அதற்கு பிறகு பெரும்பாலான பள்ளி மாணவர்களும் இப்படியே நடந்து கொள்ளத் தொடங்கியதையடுத்து, இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் சொன்னதாவது:

விநோதம்
"எங்கள் பள்ளியில் சில மாணவிகள் விசித்திரமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள்... அவர்கள் சத்தமாக அழுது, கூச்சலிட்டார்கள்.. அவர்களுக்கு வியர்த்து கொட்டுவது. தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.. இதை பார்த்து நாங்கள் பயந்துவிட்டோம்.. பிறகு, மாணவிகளின் பெற்றோரிடம் தெரிவித்தோம்.. அவர்கள் ஒரு பூசாரியை அழைத்து வந்து மந்திரம் சொன்னார்கள்... அதன் பிறகு நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.. ஆனால், இப்போது அதிகளவில் குழந்தைகள் அப்படி நடந்து கொள்கின்றனர்..

ஹோமம்
இந்த பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் வந்தபோதும், குழந்தைகள் இப்படித்தான், வினோதமாக நடந்து கொண்டனர். பள்ளி வளாகத்திற்குள் பூஜை, ஹோமம் செய்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள், அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்கள்.. ஆனால், இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.. அதற்கு பிறகுதான், டாக்டரை வரவழைத்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்" என்றனர்.

ஹிஸ்டீரியா
இது ஹிஸ்டீரியா பிரச்சனை என்கிறார்கள்.. இது விசித்திரமான பிரச்சனை.. அசாதாரணமான நடத்தைகள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடாகும்... பாதிக்கப்பட்டவர்கள் பைத்தியம் போல் வினோதமாக நடந்து கொள்ளும் மனப் பிரச்சனை.. மனநலம் சரியாக இல்லாதபோது இதுபோன்று நிகழ்கிறது. இப்படி ஒருவர் நடந்து கொள்ளும்போது அது அவர்களை சுற்றி இருப்பவர்களையும் இது பாதிக்கிறது.. இதனால் அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்... இது உணர்ச்சி அல்லது உளவியல் அழுத்தத்தால் தூண்டப்படும் உடல் பிரச்சினையாகவும் தோன்றலாம்... இதற்கு அதிகாரப்பூர்வ சிகிச்சை எதுவும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications