தேர்தலுக்கு முன்பே.. நாகலாந்தில் வென்ற பாஜக எம்எல்ஏ.. காங்., விபூதி அடித்த ‛கை’ வேட்பாளர்.. ட்விஸ்ட்

நாகலாந்தில் உள்ள 60 தொகுதிக்கு பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய பாஜக எம்எல்ஏ போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோஹிமா: நாகாலாந்தில் வரும் பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் அகுலுட்டோ சட்டசபை தொகுதியில் பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இறுதி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி திடீரென போட்டியில் இருந்து விலகியது அக்கட்சியை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அங்கு என்ன நடந்தது? என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் பதிவாகும் ஓட்டுக்கள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

நாகலாந்து நிலவரம்

நாகலாந்து நிலவரம்

இந்த 3 மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநில கட்சிகள், பிராந்திய கட்சியினரும் களமிறங்கி உள்ளனர். நாகலாந்தை பொறுத்தமட்டில் தற்போது என்பிஎப் கட்சியின் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்பிஎப் கட்சிக்கு 26 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளன. நைபியு ரியோ முதலமைச்சராக உள்ளார்.

20 தொகுதியில் பாஜக

20 தொகுதியில் பாஜக

இந்நிலையில் தான் வரும் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக, என்பிஎப் கட்சிகள் முயன்று வரும் சூழலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற முயன்று வருகிறது. இந்நிலையில் தான் இந்த தேர்தலில் என்பிஎப் கட்சியின் கூட்டணியில் பாஜக மொத்தம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும்.

 பாஜக-காங்கிரஸ் போட்டி

பாஜக-காங்கிரஸ் போட்டி

இந்நிலையில் தான் நாகலாந்தில் அகுலுடோ சட்டசபை தொகுதி காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக கெகஷே சுமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான கசெட்டோ கிமினி மீண்டும் களமிறங்கி இருந்தார். தொகுதியில் இவர்கள் 2 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனால் இருவரில் ஒருவர் எம்எல்ஏ ஆவது உறுதியானது.

போட்டியின்றி வென்ற பாஜக

போட்டியின்றி வென்ற பாஜக

இந்நிலையில் தான் நேற்று முன்தினம் வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாளாகும். இந்த வேளையில் காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி திடீரென தனது வேட்புமனுவை திரும்ப பெற்றார். இதனால் பாஜக வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இதனை முறைப்படி தேர்தல் அலுவலர் சஷாங்க் சேகர் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் அதிர்ச்சி

காங்கிரஸ் அதிர்ச்சி

இதன் மூலம் நாகாலாந்தில் தேர்தலுக்கு முன்பே பாஜக முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க அகுலுட்டோ சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கெகாஷே சுமி திடீரென தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி நாகாலாந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ரனாஜித் முகர்ஜி கூறுகையில், ‛‛ஆர்ஜேடி இளைஞரணித் தலைவராக இருந்த கெகாஷே சுமி கட்சியில் இணைந்து போட்டியிட விரும்பினார். தேர்தலில் வாய்ப்பளித்தோம். தற்போது அவர் வாபஸ் பெற்றுள்ளார். இது எங்களுக்கு பெரிய இழப்பு இல்லை'' என்றார். இருப்பினும் இது அந்த தொகுதி காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

முதல் முறையல்ல..

முதல் முறையல்ல..

நாகாலாந்து சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ போட்டியின்றி வெற்றி பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வடக்கு அங்காமி II தொகுதியில் என்பிஎப் வேட்பாளரான சுப்புவோ அங்காமி கடைசி நாளில் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் தற்போதைய முதல்வர் நைபியு ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+