நாகாலாந்து ஆளுநர் வைக்கம் புருஷோத்தமன் ராஜினாமா!
கோஹிமா: நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட வைக்கம் புருஷோத்தமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்தது முதலே மாநில ஆளுநர்கள் மாற்றப்படுவர் என்று கூறப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசும் சில மாநில ஆளுநர்களை பதவி விலக வலியுறுத்தி வந்தது.

இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து மாநில ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். ஹெலிகாப்டர் ஊழல் பேர விவகாரத்தில் சிபிஐயால் விசாரிக்கப்பட்ட நிலையில் மேற்கு வங்க ஆளுநராக இருந்த எம்.கே. நாராயணன், கோவா ஆளுநராக இருந்த வான்சூ ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
பின்னர் பதவி விலக மறுத்து வந்த மிசோரம் மாநில ஆளுநராக இருந்த வைக்கம் புருஷோத்தமனை நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றியது மத்திய அரசு. குஜராத் மாநில ஆளுநராக இருந்த கமலா பெனிவாலை மிசோரம் மாநில ஆளுநராகவும் மாற்றி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தம்மை கலந்து ஆலோசிக்காமலேயே நாகாலாந்து மாநில ஆளுநராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வைக்கம் புருஷோத்தமன் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உத்தரவை திருப்பி அனுப்பினார்
அத்துடன் தம்மை நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவையும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் வைக்கம் புருஷோத்தமன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications