ஆந்திராவில் அதிர்ச்சி.. நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்கு படுதோல்வி.. தெலுங்கு தேசம் வெற்றி
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஜெகன் கட்சி பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், அங்கு நகரி தொகுதியில் போட்டியிட்ட ரோஜா தோல்வி அடைந்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.

ஆந்திரப் பிரதேச சட்டசபை: இன்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில், ஆந்திரா சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படுகிறது. ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார்.
ஆந்திராவில் இப்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது. ஜெகன் கட்சியில் இருந்த பல முக்கிய தலைவர்களும் தோல்வியைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. அவர் இந்த முறை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நகரி தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவருக்கு எதிராகத் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஜி பானு பிரகாஷ் என்பவர் போட்டியிட்டார். அதேபோல காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகேஷ் ரெட்டி போட்டியிட்டார்.
பின்னடைவு: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அங்கு மிகப் பெரிய தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. அது ரோஜா போட்டியிட்ட நகரி தொகுதியிலும் எதிரொலித்துள்ளது.
ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா பெற்ற வாக்குகளை காட்டிலும் தெலுங்கு தேசம் வேட்பாளர் பானு பிரகாஷ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
என்ன காரணம்: தேர்தல் முடிவுகளில் இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஆந்திராவின் நகரி தொகுதியில் நடிகை ரோஜாவுக்குப் படுதோல்வி உறுதி என்றே கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நாளன்றே ரோஜா தனக்கு எதிராகச் சொந்த கட்சித் தலைவர்களே வேலை பார்த்ததாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் என்ன நடந்தது: கடந்த தேர்தலில் ஆந்திராவில் ஜெகன் கட்சி ஒரு க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151இல் வென்று அசுர பலத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியால் வெறும் 23 இடங்களில் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் மற்றும் பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications