பெங்களூரு ஏர்போர்ட்டைப் பயன்படுத்தி ஆந்திராவில் தொழில் பண்ணுங்க... நாயுடுவின் அதிரடி அழைப்பு!
பெங்களூரு: ஆந்திர எல்லையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்தான் பெங்களூரு விமான நிலையம் உள்ளது. எனவே ஆந்திராவில் தொழில் முதலீடுகளைச் செய்வோருக்கு பெங்களூரு விமான நிலையம் பேருதவியாக இருக்கும் என்று பெங்களூரு ஏரோ இந்தியா கண்காட்சியில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கூறினார்.
பெங்களூரில் நடந்து வரும் ஏரோ இந்தியா கண்காட்சியையைப் பார்க்க நாயுடு வந்திருந்தார். அங்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் பேசுகையில், ஆந்திராவில் 40,000 ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. நிலத்துக்கு அங்கு பஞ்சமே இல்லை. அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ளன. எனவே நினைத்து நிமிடத்தில் அங்கு தொழில் பிரிவுகளை அமைக்க முடியும்.

2022ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் முன்னணி மாநிலங்கள் வரிசையில் முதல் 3 இடத்தில் ஆந்திரா இருக்கும்.
ஆந்திர எல்லையிலிருந்து பெங்களூர் விமான நிலையம் 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது. எனவே ஆந்திராவுக்கு வந்து தொழில் நிறுவனங்களை ஆரம்பியுங்கள். பெங்களூரு விமான நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆந்திராவில் தற்போது 5 விமான நிலையங்கள் உள்ளன. கூடுதலாக 6 விமான நிலையங்களை அமைக்க திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் நாயுடு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications