வாரணாசியில் மோடியை பார்த்தீங்களே.. அவர் காரை கவனிச்சீங்களா?
Recommended Video
வாரணாசி: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று, நடத்திய ரோடு ஷோவிற்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் கார் பற்றி சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரணாசியில் தன்னை 4 லட்சத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார். முன்னதாக, அவர், கான்வாய் கார்கள் புடைசூழ, காரில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார்.
அப்போது சாலையின் இரு புறங்களிலும் நின்றபடி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். பிரதமர் பயணித்த கார் ரேஞ்ச் ரோவர் வகையை சேர்ந்தது. அதன் முன் பகுதியில், இந்திய தேசிய கொடி பட்டொளி வீசி பறந்ததை பார்க்க முடிந்தது.

சக்திமிக்க இன்ஜின்
3 லிட்டர் இன்ஜின் பொறுத்தப்பட்ட, பெட்ரோலை கொண்டு இயங்கும் பரவர்ஃபுல் கார் இது. 3.0 லிட்டர் வி6 சூப்பர் சார்ஜ், பெட்ரோல் இன்ஜின் 340 ஹெச்பி சக்தியையும், 6500 ஆர்பிஎம் மற்றும் 450 என்எம் டார்க் (3500-5000 ஆர்பிஎம்) தரக்கூடியது. 0-100 கி.மீ வேகத்தை, 7.8 வினாடிகளிலேயே அடைந்துவிடும் சூப்பர் பார்ஸ்ட் கார்.

விலை 2 கோடி
ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் பெட்ரோல் எல்டபிள்யூபி வோக் ரூ.1.92 கோடி, ரேஞ்ச் ரோவர் 3.0 லிட்டர் எல்டபிள்யூபி வோக் எஸ்இ வகை கார்கள் 2.11 கோடி மதிப்புள்ளவை (ஷோரூம் விலை). இந்த வகை கார்களில் நிறைய பாதுகாப்பு வசதிகள் உண்டு.

பாதுகாப்பு அம்சங்கள்
எந்த மாதிரி சாலையாக இருந்தாலும், அதற்கு ஏற்ப மாறி சுமுகமாக ஓடக்கூடிய, டெர்ரைன் ரெஸ்பான்ஸ் வசதி, டயர் அழுத்தம் கண்காணிப்பு சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் போர்ஸ், கார்னரிங் பிரேக் கட்டுப்பாடு, எலக்ட்ரானிக் ஏர் சஸ்பென்சன், மலைப்பாதையிலும் பின்நோக்கி வாகனம் நகராமல் தடுக்கும், ஹில் டெசன்ட் கட்டுப்பாடு உண்டு.

குண்டு துளைக்காத கண்ணாடி
இதேபோல, கார் உருள்வதை தடுக்கும் கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் ரேஞ்ச் ரோவர் வோக் எல்டபிள்யூபி வகை கார்களில் உண்டு. இந்த வகை கார்கள் உலகின் முக்கிய தலைவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக குண்டுதுளைக்காத கண்ணாடிகள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications