பைக்கில் வந்த 2 பேருக்கு மரண பயத்தை காட்டிய யானை: வீடியோ இதோ
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற இருவரை நசுக்கப் பார்த்தது.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கோருமரா தேசிய பூங்காவில் வசித்து வரும் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை மிரட்டுவது உண்டு. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானைகள் பூங்காவில் இருந்து வெளியேறியுள்ளன.
அப்போது ஒரு யானை மட்டும் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து வந்தது. இதை பார்த்த மக்கள் அது செல்லும் வரை காத்திருந்தனர். இந்நிலையில் பைக்கில் வந்த இருவர் யானையைத் தாண்டி செல்ல முயன்றனர்.
பைக்கின் சப்தத்தால் ஆத்திரம் அடைந்த யானை அவர்களை தாக்கியது. பைக்கில் இருந்த ஒருவர் அங்கிருந்து ஓடிவிட்டார். மற்றொருவர் பைக்கின் அடியில் சிக்கிக் கொண்டார். யானை பைக்கை நசுக்க முயன்றபோது அந்த நபர் ஒரு வழியாக அங்கிருந்து தப்பியோடினார்.
யானை அவரை விடாமல் விரட்டிச் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து பட்டாசுகள் வெடித்து யானையை பூங்காவிற்கு செல்ல வைத்தனர். யானையை திரும்பிச் செல்ல வைக்க இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications