பால்கனியில் மணமக்கள்... பேண்டு வாத்தியங்களுடன் வந்த போலீசார்... இப்படித்தான் நடக்க வேணும் திருமணம்!
வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு நாசிக் போலீசார் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
நாசிக்: மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில், வீட்டிலேயே திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிக்கு போலீசார் அளித்த வரவேற்பு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களுக்கு மேலாக இந்திய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஒருபுறம் ஏழை எளிய தொழிலாளர்கள் வருமானம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்த கொடுமையில் இருந்து எப்போது தப்பிப்போம் என மக்கள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஏப்ரல், மே மாதங்களில் நிச்சயம் செய்யப்பட்டிருந்த பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில், சிலர் தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கி வருகின்றனர்.
அப்படித்தான் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வீட்டிலேயே மிக எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். அதை அறிந்த அந்த ஊர் போலீசார், புதுமண தம்பதியின் இந்த செயலை பாராட்டும் வகையில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் நாசிக் போலீஸ். அந்த வீடியோவில், புதுமண தம்பதி தங்கள் வீட்டு பால்கனியில் நிற்கின்றனர். பேண்ட் வாத்தியங்கடன் கீழே இருக்கும் போலீசார் இந்தி பட பாடல் ஒன்றை பாடி தம்பதியை வாழ்த்துகின்றனர். அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்கள் இதனை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
"கொரோனா ஊரடங்கு உத்தரவை மதித்து தங்கள் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு வாழ்த்துகள். அவர்களை பாராட்டுவதற்காகவே நாசிக் போலீஸ் இப்படி செய்கிறது", என அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்திலும், அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications