For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏப்ரல் 19ல் பிரம்மா ஓய்வு... புதிய தலைமை தேர்தல் ஆணையராகிறார் நசீம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பிரம்மாவின் பதவிக் காலம் வரும் 19ம் தேதியோடு நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பதவியேற்க உள்ளார்.

தர்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக எஸ்.பிரம்மா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் இம்மாதம் 19ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடவடிக்கையில் சட்ட அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

Nasim Zaidi set to become next CEC

அதன்படி, தேர்தல் ஆணையத்தில் மூத்த ஆணையராக இருக்கும் நசீம் ஜெய்தியை, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரம்மா ஓய்வு பெற்றதும், புதிய தமைலை தேர்தல் ஆணையராக நசீம் ஜெய்தி பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

1976-ம் ஆண்டு இந்திய ஆட்சி பணியில் சேர்ந்த நசீம் ஜெய்தி, விமான போக்குவரத்து அமைச்சகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். இவர் வரும் 2017-ம் ஆண்டு வரை, அதாவது 65 வயது ஆகும் வரையில் தலைமை தேர்தல் ஆணையராக பதவியில் நீடிப்பார்.

English summary
Election Commissioner Nasim Zaidi will become the next Chief Election Commissioner later this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X