மிதக்கும் சென்னை; மீட்புப் பணியில் மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்!
டெல்லி: மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்பதற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை வரவுள்ளனர்.
கன மழையால் சென்னை விமானம் மூடப்பட்டுள்ளது. இதனால் விமானச் சேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர்.

பின்னர் அங்கிருந்து குழுக்களாக பிரிந்து செல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்பதற்கு 40 காற்றடைத்த படகுகள் மற்றும் உணவுப் பொருள்களையும் எடுத்து வருகின்றனர்.
NDRF teams leave for Tamil Nadu from Delhi with relief material. #ChennaiFloods pic.twitter.com/y243NWLdOy
— ANI (@ANI_news) December 2, 2015 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் அச்சப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறாமல் தங்கள் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வழங்குவார்கள் என குழுவின் தலைவர் ஒ.பி. சிங் கூறினார்.
NDRF teams leave for Tamil Nadu from Delhi with relief material. #ChennaiFloods pic.twitter.com/WkrDzWkr4S
— ANI (@ANI_news) December 2, 2015 ஏற்கெனவே 40 பேர் அடங்கிய 11 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவமும் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மொத்தம் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள், மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பில் 011-2436 3260, 09711077372 ஆகிய அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications