ஒடிஷாவில் 4-வது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்!
புவனேஸ்வரம்: ஒடிஷா மாநிலத்தில் 4வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பொறுப்பேற்கிறார்.
ஒடிஷா மாநில சட்டசபை தேர்தலில் 147 தொகுதிகளில் 117-ஐ பிஜு ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸுக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 10 இடங்களும் கிடைத்தன.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பிஜு ஜனதா தளத்திற்கு 103 இடங்கள்தான் கிடைத்தன. இப்போது அக்கட்சிக்கு 14 இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன.

இதைத் தொடர்ந்து தலைநகர் புவனேஸ்வரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிஜு ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் சட்டசபை குழுத் தலைவராக நவீன் பட்நாயக்கை நியமிக்கும் தீர்மானத்தை மூத்த எம்.எல்.ஏ. வி.சுக்யான் குமாரி தியோ முன்மொழிந்தார். அதை எம்.எல்.ஏ. தாமோதர் ராவுத் வழிமொழிந்தார்.
இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவீன் பட்நாயக், 4-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். அவர் 2000-ம் ஆண்டிலிருந்து முதல்வராக இருந்து வருகிறார்.
தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்த நவீன் பட்நாயக், ஒடிஷாவின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications