இமாச்சலில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.. கெத்து காட்டிய காங்கிரஸ் - கொண்டாட்டத்தில் அரசு ஊழியர்கள்
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அங்கு புதிதாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.
காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினை, ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அமல்படுத்தியதை அரசு ஊழியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இமாச்சலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலானதை அடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில அரசு ஊழியர்கள் மத்தியிலும் இந்தக் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

தூக்கியெறியப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டம்
2003-ம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் காலம் காலமாக தொடர்ந்து வந்தது. இதனிடையே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியவம் வழங்குவதற்கே அரசு நிதி பெருமளவில் செலவிடப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, இந்த ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அரசு ஊழியர்களின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் 2004-ம் ஆண்டு முதல் பல மாநிலங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்
இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களின் சம்பளத்திலேயே ஒருபகுதி பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கே ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இப்போது வரை தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும், நிதி செலவினத்தை கருத்தில்கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தயாராக இல்லை.

காங்., கொடுத்த வாக்குறுதி
இந்நிலையில், இமாச்சல் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்பதே இருந்தது. இதனை அப்போது ஆட்சியில் இருந்த பாஜக கடுமையாக விமர்சித்தது. ஆட்சிக்கு வருவதற்காக காங்கிரஸ் இவ்வாறு வாக்குறுதி அளிப்பதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்து வந்தது. எனினும், இந்த வாக்குறுதிக்காகவே அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் காங்கிரஸுக்கு வாக்களித்தனர். இதனால் அமோக வெற்றி பெற்று இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சிக்கட்டிலை கைப்பற்றியது. காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்வீந்தர் சிங் முதல்வராக பதவியேற்றார்.

வாக்குறுதி நிறைவேற்றம்
இந்நிலையில், ஆட்சிப்பொறுப்பேற்ற ஒருசில மாதங்களிலேயே அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு அமல்படுத்தியுள்ளார். இதற்கான கோப்பில் அவர் நேற்று இரவு கையெழுத்திட்டார். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவதால் இமாச்சலில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என முதல்வர் சுக்வீந்தர் சிங் சுகு தெரிவித்தார். மேலும், இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடி முதல் ரூ.900 கோடி வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், அரசு ஊழியர்களின் நலனுக்காக இத்திட்டத்தை முழு மனதுடன் காங்கிரஸ் செயல்படுத்துகிறது என்றும் முதல்வர் சுக்வீந்தர் சிங் கூறினார். இதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலில் உள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களின் வரிசையில் 7-வது மாநிலமாக இமாச்சலும் இடம்பெற்றிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications