ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம்: சிபிஐ இயக்குநருக்கு எதிராக புதிய மனு!
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந் நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இதை சுட்டிக் காட்டி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:

மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று சிபிஐ-யின் அனைத்து விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிபிஐ இயக்குநர் அதனை ஏற்க மறுத்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவிடாமல் தடுத்து வருகிறார். இதேபோல் 2ஜி வழக்கில் ரிலையன்ஸ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரி கைக்கு மாற்றாக புதிய குற்றப் பத்திரிகையை சிபிஐ தயாரித்துள்ளது.
இது முந்தைய குற்றப் பத்திரிகைக்கு நேர்மாறானதாக உள்ளது. ரிலையன்ஸ் நிறுவ னத்தைக் காப்பாற்றும் நோக்கத்தில் சிபிஐ இயக்குநர் செயல்படுகிறார்.
எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ இயக்குநரின் தலையீடு இருக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 2-ம் தேதி 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, ரஞ்சித் சின்கா தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications