போபாலில் ஐஎஸ் ஆதரவாளரான 24 வயது வாலிபர் கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் ஒருவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் உள்ள பார்கேடாவைச் சேர்ந்தவர் அசார் இக்பால்(24). ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர். அவர் போபாலில் இருக்கும் புட்லி கார் பகுதியில் உள்ள லாய்க் அகமது என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்தார்.

அவர் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து தேசிய புலனாய் அமைப்பு அதிகாரிகள் அகமதுவின் வீட்டிற்கு சென்று இக்பாலை திங்கட்கிழமை கைது செய்தனர். இக்பாலை கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு போபால் போலீசார் உதவி செய்தனர்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி டெல்லியில் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 15 பேரை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் தான் இக்பால் போபாலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications