பீகார் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.. 129 எம்எல்ஏக்கள் ஆதரவு
பாட்னா: பீகார் மாநில சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியூ-பாஜக கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் 129 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து அவரது அரசு தப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக- நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

இதனையடுத்து நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- ஆர்ஜேடி-இடதுசாரிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த கூட்டணியில் இருந்தும் அண்மையில் நிதிஷ்குமார் விலகி மீண்டும் பாஜக அணியில் இணைந்தார்.
இதனையடுத்து கடந்த 4 ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்துவிட்டு 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்து நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டசபையில் இன்று நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்திருந்தார்.
பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்கள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். தற்போதைய நிலையில் பீகார் சட்டசபையில் நிதிஷ்குமார் அரசுக்கு ஆதரவு: 127 பாஜக - 78 ஹெச்.ஏ.எம்.எஸ்-4 நிதிஷ்குமாரின் ஜேடியூ- 45 எதிர்க்கட்சிகள்: 114 லாலுவின் ஆர்ஜேடி- 79 காங்கிரஸ் -19 இடதுசாரிகள் - 16 பீகாரில் பெரும்பான்மையைவிட 5 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக நிதிஷ் அரசுக்கு உள்ளது.
இருந்த போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துவிடக் கூடும் என்பதால் அவர்கள் அத்தனை பேரையும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளது டெல்லி மேலிடம். இந்த பின்னணியில் திடீரென நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியில் 6 எம்.எல்.ஏக்கள் மாயமானார்கள்.
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் திடீரென ஆளும் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் காணாமல் போனது முதல்வர் நிதிஷ்குமார் தரப்பை அப்செட் ஆக்கியது. நிதிஷ்குமார் அரசு இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பி பிழைக்குமார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
122 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு தேவைப்படும் நிலையில் 129 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர். இதனையடுத்து அரசு தப்பியுள்ளது முதல்வராக நீடிக்கிறார் நிதிஷ்குமார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications