அதிமுக அரசுக்கு ஆதரவு அளிப்போம், ஆனால் கூட்டணி கிடையாது: மத்திய அமைச்சர் ஜேட்லி
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக அதிமுகவுடனோ, திமுகவுடனோ கூட்டணி வைக்காது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 8 மாநிலங்களில் ஆட்சியை இழந்து நிற்கிறது.

சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். சமூக பிரச்சனை ஏற்படாத வகையில் உள்நாட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்பட்ட களங்கம் தற்போது நீங்கியுள்ளது.
நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தனது எதிர்கால பாதையை தெளிவாக வகுத்து செயல்பட்டு வருகிறது. மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசுடன் மத்திய அரசு நல்லுறவை பேணும். தமிழகத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும். ஆனால் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடனோ, திமுகவுடனோ பாஜக கூட்டணி வைக்காது. தேர்தலுக்கு தனி உத்தி வகுத்து பாஜக செயல்படும் என்றார்.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications