For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று பெங்களூரில் பந்த் இல்லை: போலீஸ் அறிவிப்பு#cauvery

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து இன்று முதல் வரும் 27ம் தேதி வரை வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று பெங்களூரில் பந்த் நடக்காது என்று மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவிரியில் 50 டிஎம்சி நீர் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது கர்நாடகா தரப்பு, அணைகளில் போதுமான நீர் இல்லை என வாதிட்டது.

No bandh tomorrow: Say Bengaluru police#cauvery

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து இன்று முதல் வரும் 27ம் தேதி வரை வினாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க அவர்கள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் எதுவும் நடக்காது என்று மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த பதட்டமான சூழலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று அமைச்சரவையை கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bengaluru police says there will be no bandh tomorrow over Cauvery issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X