நடிகை ஜியா கொலை செய்யப்படவில்லை என்கிறது போலீஸ்: ஹைகோர்ட் போகும் அம்மா ராபியா
மும்பை: தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானின் அம்மா ராபியா தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற கோணத்தில் விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறார்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே ஜியா கொலை செய்யப்பட்டதாகக் கூறிய அவரின் தாய் ராபியா அதற்கான சில ஆதாரங்களை போலீசில் அளித்தார். இது குறித்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்.

இந்நிலையில் 447 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த போலீசார் ஜியா தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவர் கொலை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் ராபியாவோ போலீசார் ஒழுங்காக விசாரணை நடத்தவில்லை என்றும், அவர்கள் மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதை கொலை என்ற கோணத்தில் விசாரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராபியாவின் வழக்கறிஞர் தினேஷ் திவாரி கூறுகையில்,
ஜியா கொலை செய்யப்பட்டார் என்று நம்பும் ராபியா அளித்த ஆதாரங்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் இது குறித்து அடுத்த வாரம் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம் என்றார்.
<center><iframe frameborder="0" width="100%" height="417" src="http://www.dailymotion.com/embed/video/x1a5efe?autoplay=1&logo=1&hideInfos=0&start=0&syndication=127059&foreground=&highlight=&background="></iframe></center>
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications