மார்க்சிஸ்ட் கட்சியில் கோஷ்டி பூசல்- பிரகாஷ் காரத்துக்கு எதிராக யெச்சூரி, அச்சுதானந்தன் போர்க்கொடி!
டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, அச்சுதானந்தன் போர்க்கொடி தூக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெறும் 9 இடங்களைத்தான் கைப்பற்றியது. அதுவும் 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகளில்தான் மார்க்சிஸ்ட் கட்சியால் வெல்ல முடிந்தது. தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக காலூன்ற முயற்சித்து வருகிறது.

மாநிலக் கட்சியாக சுருங்கி...
இதேபோல் கேரளாவில் பெரும் பின்னடைவை எதிர்கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. தேசியக் கட்சிகளில் ஒன்றாக இருந்த போதும் ஒரு மாநிலக் கட்சியைவிட மோசமான இடங்களையே மார்க்சிஸ்ட் கட்சியால் பெற முடிந்துள்ளது.
மத்திய குழுக் கூட்டம்- யெச்சூரி அறிக்கை
இந்த நிலையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கடந்த 35 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கட்சி கடைபிடித்து வரும் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 5 பக்க அறிக்கை ஒன்றை மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்தார்.
கட்சி தலைமை மீது புகார்
கடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை தவறான வியூகம் வகுத்ததே காரணம் என்றும் சாடியிருக்கிறார் யெச்சூரி.
அச்சுதானந்தன் போர்க்கொடி
இதேபோல் மற்றொரு மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், 10 பக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்படியெல்லாம் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது; சில இடங்களில் மோடியைக் கூட மார்க்சிஸ்ட் கட்சியினர் புகழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சுதானந்தன், இப்படியே போனால் கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வியைத்தான் சந்திக்கும் என்று சாடியுள்ளார்.
சுயபரிசோதனைதான்..
இப்படி மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பூசல் வெடித்துள்ளது குறித்து டெல்லியில் இன்று அக்கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரகாஷ் காரத், கட்சியில் பூசல் என்று எதுவும் இல்லை. சுயபரிசோதனைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சி புதிய அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. அத்தகையோர் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஆராய்ந்து வருகிறோம் என்று பட்டும் படாமல் மட்டும் கூறினார்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications