லக்னோவில் ராஜ்நாத் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தேனா.. லால்ஜி டாண்டன் மறுப்பு

இந்தத் தொகுதியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கே போட்டியிடப் போவதாகவும், அதற்கு லால்ஜி டாண்டன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இப்படி மறுத்துள்ளார் டாண்டன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதெல்லாம் இல்லை. நான் ராஜ்நாத் சிங்குக்கு எதிராக குரல் கொடுத்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. எனக்கும் கட்சித் தலைவருக்கும் இடையே இதயப்பூர்வமான உறவு, நட்பு உள்ளது.
அவருக்கு எதிராக நான் பேசுவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி நான் பேசவும் இல்லை.
மேலும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதைப் போல ராஜ்நாத் சிங், லக்னோ தொகுதியில் போட்டியிடப் போவதாக கட்சியில் எந்த விதமான அறிகுறியும் இல்லை, பேச்சும் இல்லை.
நான் லக்னோ தொகுதியின் தற்போதைய எம்.பி. என்னிடம் வேறு தொகுதியைப் பார்த்துக் கொள்ளுமாறு இதுவரை யாரும் கட்சியிலிருந்து கேட்கவும் இல்லை.
நரேந்திர மோடி இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினால் நிச்சயம் நான் அவரை வரவேற்பேன்.
நான் லக்னோவில் பிறந்தவன். மாநிலத் தலைநகரின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவன். லக்னோவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன் என்றார் அவர்.
முன்பு லக்னோ தொகுதியிலிருந்துதான் வாஜ்பாய் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தீவிர விசுவாசிதான் லால்ஜி டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications