மோடி ஆட்சிக்கு வந்த பின்.. இந்தியாவில் தீவிரவாத தாக்குதலே நடக்கவில்லை: ராஜ்நாத் சிங்
காந்தி நகர்: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவில் தீவிரவாதிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடந்த பாஜக கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை நிகழ்த்தினார். இதில் பாஜக கட்சி குஜராத்தில் பெறும் தொடர் வெற்றிகள் குறித்து பாராட்டி பேசினார்.
குஜராத் எப்போதும் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. பாஜகவின் கோட்டையாக குஜராத் இருந்துள்ளது. எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் குஜராத் மக்களுக்கு நன்றி என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

உரை
இந்த நிலையில் ராஜ்நாத் சிங் தனது பேச்சில், இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தீவிரவாதிகள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை. தீவிரவாதிகள் மத்தியில் இந்தியாவை பார்த்து பயம் வந்துவிட்டது. காஷ்மீரை விடுங்கள் இந்தியாவில் எங்குமே தீவிரவாதிகளாக தாக்குதல் நடத்த முடியவில்லை.

உரி
உரி தாக்குதலுக்கு பின்பக்க அண்டை நாட்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. அதன்பின் மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்தியா அடுத்தடுத்து நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்களில் தீவிரவாத முகாம்கள் அளிக்கப்பட்டது. அதன்பின் தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்தவில்லை.

சர்ஜிக்கல்
இந்தியா மீது கை வைக்க அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் எங்கே புகலிடம் தேடி இருந்தாலும் கூட.. பாதுகாப்பாக தலைமறைவில் இருந்தால் கூட இந்தியா மீது மட்டும் கை வைக்க அவர்கள் பயப்படுகிறார்கள். தீவிரவாதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது பாஜக அரசு. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இப்படி இல்லை.

காங்கிரஸ்
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு உரிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக சரியாக நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications