தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணமில்லை - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவுவதால் ஆட்சி கலைப்பு எதுவும் நடக்காது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: அ.தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. அதனை காரணமாக வைத்து தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க, முகாந்திரம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அஇஅதிமுக பல அணிகளாக பிளவுபட்டது. இதனையடுத்து பிளவுபட்ட அணிகளில் முக்கியமான அணிகளான ஓபிஎஸ் அணி, ஈபிஸ் அணிகள் மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த கட்சியானது. ஆனாலும் அஇஅதிமுக மேலிடத்தில் இன்னமும் அமைதி ஏற்படவில்லை. இதனால் ஆட்சி கலையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணிகள் இணைப்புக்கு பின்னர், டி.டி.வி தினகரன் எதிர்ப்பு நிலை அஇஅதிமுகவில் வலுத்தது. இதனால், 21 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக பிரிந்து வந்து தினகரனை ஆதரித்தனர்.
மேலும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தங்களது ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர். இது தமிழக அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
சட்டசபையில் மெஜாரிட்டியை, நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதனால் அடுத்தக்கட்ட பரபரப்புக்கு அஇஅதிமுக தயாராகியுள்ளது.
தமிழக அமைச்சர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் அரசியல் நிலவரம்தான் பேசினார்கள் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிகின்றன.
இந்நிலையில், "தமிழகத்தில் ஆட்சியை கலைப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை. அதிமுகவில் நடப்பது உட்கட்சிப்பூசல். இதனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது" என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications