அம்பானியின் பாக்கெட்டில் மோடி, ராகுல்: ராகுலிடம் கடிதம் மூலம் 4 நறுக் கேள்விகள் கேட்ட கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியிடம் கடிதம் மூலம் 4 கேள்விகள் கேட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் ஒரு பாக்கெட்டில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், மற்றொரு பாக்கெட்டில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த இருவரில் யார் ஆட்சியை பிடித்தாலும் நாட்டை ஆளப் போவது என்னவோ அம்பானி தான் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவால் ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே ஒரு யூனிட் கேஸுக்கு 4 டாலர்கள் பெறுகிறது. ஒரு யூனிட் கேஸுக்கு 2.3 டாலர்கள் கொடுக்கவே சம்மதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விலையை ஒரு யூனிட்டுக்கு 8 டாலர்காக உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸுக்கு ரூ.54 ஆயிரம் கோடி லாபம் ஏற்படும்.
வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நாட்டில் பயம் ஏற்படும். சமையல் கேஸ், போக்குவரத்து மற்றும் உரங்களின் விலை உயர்ந்து உணவுப் பொருட்களின் விலை உயரும். நீங்களும், மோடியும் இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக உள்ளீர்கள்?
தேர்தல் வரும் நேரத்தில் கேஸ் விலை எதற்காக இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மக்கள் வியக்கின்றனர். காங்கிரஸ் கட்சி முகேஷ் அம்பானியிடம் இருந்து ஏதாவது பெறுகிறதா?. அப்படி என்றால் அது என்ன?
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கையில் அம்பானிக்கு எதிராக டெல்லியின் ஊழல் எதிர்ப்பு பிரிவு வழக்கு தொடர்ந்தபோது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முகேஷ் அம்பானியுடன் இந்த 2 கட்சிகளுக்கும் அவ்வளவு உறவு உள்ளதா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரிலையன்ஸ் கேஸ் விலை பற்றி கெஜ்ரிவால் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications