பறிபோன 280 உயிர்கள்..ஒடிசா ரயில் விபத்தில் அவிழாத மர்ம முடிச்சுகள்.. 5 கேள்விகளுக்கு விடை எப்போது?
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் இந்த விபத்தில் மர்ம முடிச்சுகள் நிறைந்துள்ள நிலையில் 5 முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் நேற்று இரவு தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது இந்த விபத்து நடந்தது. அப்போது தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.

இந்தவேளையில் அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இப்படி 3 ரயில்கள் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் தற்போது வரை தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உள்பட 280 பேர் வரை பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே இந்த கோர ரயில் விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. கேள்விகள் கேட்கப்படும் போது தான் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என்பதால் பலரும் ரயில் விபத்து குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதில் முக்கிய 5 கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே விபத்துக்கான காரணம் முழுவதுமாக தெரிந்துவிடும்.
அந்த வகையில் முதலாவது கேள்வி என்னவெனில் எப்படி 3 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது? என்பது தான். இந்தியாவில் ரயில்கள் தடம்புரள்வது அவ்வப்போது நடக்கும். ஆனால் ஒரே நேரத்தில் 3 ரயில்கள் ரயிலில் சிக்கியது தான் இனம்புரியாத கேள்வியாக உள்ளது. மேலும் அதற்கான காரணம் என்ன? என்பது அடுத்த கேள்வியாக உதிக்கிறது. அதாவது தொழில்நுட்ப கோளாறா? இல்லாவிட்டால் சிக்னல் பிரச்சனையா? இதில் எது விபத்துக்கு காரணமாக அமைந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்பிறகு 3வது கேள்வியாக ஒரே தண்டவாளத்தில் எப்படி 2 ரயில்கள் வந்தது என்பது தான்? அதாவது சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புல்ஸ்பீடில் வந்து சரக்கு ரயிலில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் சரக்கு ரயில் மேல் ஏறி நிற்கிறது. இந்த அதிர்வால் என்ஜினை தொடர்ந்து இணைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் தடம்புரண்டு சிதறின. அடுத்த சில நிமிடங்களில் பலபேர் உயிரிழந்தன. இதனால் எப்படி ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்தன? என்பதற்கான விடையை விளக்கம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
4வது கேள்வி என்னவென்றால் ஒரே இடத்தில் 3 ரயில்கள் விபத்தில் சிக்கி 280 பேரின் உயிரை பறித்துள்ளது. மேற்கூறிய கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் இதனை பேரிடர் என்றோ, கடவுளின் செயல் என்றோ நிச்சயமாக நாம் கூறிவிட முடியாது. மாறாக இதில் யாரோ ஒருவரின் மிகப்பெரிய தவறு உள்ளது. அந்த தவறை செய்தவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், தற்போது ரயில் விபத்து மூலம் உயிரை பறிகொடுத்த மக்களின் குடும்பங்களுக்கு அவர் எந்த பதிலை கூற போகிறார்?'' என்பது தான் கடைசி கேள்வியாக உள்ளது. இதனால் விபத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழு விரிவான விசாரணை நடத்தி நடந்த தவறை கண்டறிய வேண்டும். அதோடு அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications