பெங்களூர் டிராபிக்கை பார்த்து டர்ர்ர்ர் ஆன யு.எஸ். விமான நிறுவன தலைவர்
பெங்களூர்: பெங்களூர் டிராபிக்கை பார்த்து பயந்துவிட்டதாகவும், அது உலக அதிசயங்களில் ஒன்று என்ற ரைட் பிரதர்ஸ் விமான நிறுவனத்தின் துணை டைரக்டர் நிக் எங்ளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள டேட்டனில் இருக்கும் ரைட் பிரதர்ஸ் விமான நிறுவனத்தின் துணை டைரக்டர் நிக் எங்ளர் தனது மனைவி மேரி ஜேனுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். பெங்களூர் வந்த அவர் இங்கிருக்கும் டிராபிக்கை பார்த்து பயந்துவிட்டார்.

இது குறித்து நிக் கூறுகையில்,
பெங்களூர் இந்தியாவின் ஐடி நகரம் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் விமான போக்குவரத்திற்கும் முக்கிய நகரமாக பெங்களூர் உள்ளது இங்கு வந்த பிறகே தெரிந்தது. விஸ்வேஸ்வரய்யா இன்டஸ்ட்ரியல் மற்றும் டெக்னாலஜி மியூசியம்(விஐடிஎம்) தவிர்த்து பிற பெரிய நிறுவனங்களுடன் நான் அவ்வளவாக பேசியது இல்லை.
ஏனென்றால் எனக்கு எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் மிகவும் பிடித்துள்ளது. விஐடிஎம் அருகில் தான் ரேவா தலைமையகம் உள்ளது.
நான் 6 ஆயிரம் பேர் வசிக்கும் ஊரில் உள்ளேன். அங்கு டிராபிக் இருக்காது. தெருவோரம் குழந்தைகள் கூடைப்பந்து விளையாடுவார்கள். பெங்களூர் டிராபிக்கை பார்த்து பயமாக உள்ளது. இது போன்று நான் நியூயார்க், வாஷிங்டனில் கூட டிராபிக்கை பார்த்தது இல்லை என்றார்.
நிக் தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய இமெயிலில் கூறியிருப்பதாவது,
பெங்களூர் டிராபிக் உலக அதிசயங்களில் ஒன்று. இந்திய வாகன ஓட்டிகள் ஹார்னை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்து தான் பயமாக இருந்தது. ஆனால் மக்கள் அன்பானவர்களாக இருந்தனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications