For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடிபி-பாஜக பிளவையடுத்து காஷ்மீர் ஆளுநரை சந்தித்த ஒமர் அப்துல்லா.. காரணம் இதுதான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர்: பாஜக ஆதரவு திடீர் வாபஸ்- முதல்வர் அதிரடி ராஜினாமா- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஒமர் அப்துல்லா.

    காஷ்மீரில் பாஜக-பிடிபி கட்சிகளின் கூட்டணி முறிந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான அரசு கவிழ்கிறது.

    Omar Abdullah says people have the right to choose their government in Kashmir

    இந்த நிலையில் ஆளுநர் எம்.என்.வோராவை சந்தித்த பிறகு, நிருபர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, இதுகுறித்து கூறுகையில், "2014லும் சரி, 2018லும் சரி, தேசிய மாநாட்டு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    எனவே நாங்கள் இப்போது ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை. எந்த கட்சியையும் நாங்கள் அணுகவில்லை, எந்த கட்சியும் எங்களிடமும் அணுகவில்லை. ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்க கூடாது. பொதுத் தேர்தல் நடத்தி மக்கள் ஆதரவு பெற்ற கட்சி ஆட்சிக்குவர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    National conference leader Omar Abdullah says Governor rule should not remain imposed for a long time period. After all, people have the right to choose their government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X