அப்சல் குரு குறித்து வாயை விட்ட ஓமர் அப்துல்லா! “இவங்களுக்கு இதேதான் வேலை” என பாஜக காட்டம்
ஸ்ரீநகர்: கடந்த 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் அப்சல் குரு கைது செய்யப்பட்டு, தூக்கில் ஏற்றி கொல்லப்பட்டார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் தற்போது கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தப்படுவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஆக.20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக.27ம் தேதி. அதேபோல ஆக.30 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் ஆக.29ம் தேதி தொடங்குகிறது. செப்.5ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.9 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. இதற்கு வேட்புமனு தாக்கல் செப்.5ம் தேதி தொடங்குகிறது. செப்.12ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். செப்.17 வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
இப்படி இருக்கையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவருமான ஓமர் அப்துல்லா.. அப்சல் குரு குறித்து கூறியுள்ள கருத்துக்கள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அப்சல் குருவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்துதான் ஓமர் அப்துல்லா தற்போது பேசியிருக்கிறார். அதாவது "அப்சல் குருவின் மரண தண்டனை எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை" என்று கூறியுள்ளார்.
தீவிரவாதத்தை ஒழிப்பதை நோக்கமாக கொண்டு, அப்சல் குரு தூக்கில் இடப்பட்டார் என்று சொன்னால்.. அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்கிற ரீதியில் ஓமர் அப்துல்லா விமர்சித்துள்ளார். மேலும், தூக்கு தண்டனை விவகாரத்திற்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. தூக்கு விஷயத்தில் அரசின் அனுமதி கேட்கப்பட்டிருந்தால் அது வழங்கப்பட்டிருக்காது என்றும் கூறியுள்ளார். அப்சல் குரு ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லாதான் இருந்தார்.
இப்படி இருக்கையில், ஓமர் அப்துல்லாவின் கருத்து பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இது பாஜக மத்தியில் கடும் எதிர்வினைகளை தூண்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் கவிந்தர் குப்தா, "இந்தியாவுக்கு எதிராக சதி செய்த தேச விரோதிகளுக்கு மரண தண்டனை வழங்கியதை அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? அவர்கள் பயங்கரவாதிகளின் ஆதரவை பெற விரும்புகிறார்கள். எனவேதான் இதுபோன்று பேசுகிறார்கள்" என்று ஓமர் அப்துல்லாவை கடுமையாக சாடியுள்ளார்.
ஏற்கெனவே, ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, தனது தேர்தல் அறிக்கையில் ஹரி/சங்கராச்சாரியார் மலையின் பெயரை தக்த்-இ-சுலைமான் மாற்றுவோம் என்றும், அடிக்கடி மோதலை தவிர்க்க பாகிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதற்கு ஏற்கெனவே பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில் தற்போது, அப்சல் குரு குறித்து ஓமர் அப்துல்லா கூறியுள்ள கருத்துக்கள் பாஜவின் விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications