பாஜகவுக்கு 'கருப்புப் பண' ராதா டிம்போலா தந்த ரூ. 1.8 கோடி நன்கொடை; காங்கிரசுக்கு ரூ. 65 லட்சம்!
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் ராதா டிம்போலா காங்கிரசுக்கு மட்டுமின்றி பாஜகவுக்கும் தேர்தல் செலவுகளுக்காக அள்ளித் தந்துள்ளார்.
கோவாவைச் சேர்ந்த டிம்போலா சுரங்க நிறுவனம் 2004-05ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டு காலகட்டத்தில் பாஜகவுக்கு 9 முறை நன்கொடை வழங்கியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் இவர் பாஜகவுக்கு ரூ. 1.8 கோடி தந்துள்ளார்.

அதே போல காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் நன்கொடை தந்துள்ளார். இதை 3 தவணையாக கொடுத்துள்ளார்.
2011-12ம் ஆண்டில் கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது பாஜகவுக்கு அவர் நன்கொடை தந்துள்ளார். கோவாவில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கருப்புப் பண முதலைகள் பட்டியலில் ராதாவின் பெயர் இருப்பது குறித்து கோவா பாஜக முதல்வர் மனோகர் பரிக்கரிடம் கேட்டதற்கு, நான் இன்னும் மத்திய அரசின் பிரமாண பத்திரத்தை பார்க்கவில்லை என்று மொட்டையாக பதில் தந்துவிட்டு எஸ்கேப் ஆனார்.
கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியல் வெளியானால் காங்கிரஸ் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். ஆனால், நன்கொடைகளைப் பார்க்கும்போது காங்கிரஸை விட பாஜக தான் அதிக தர்மசங்கடத்துக்கு உள்ளாக வேண்டியிருப்பதாகத் தெரிகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications