OneIndia Exclusive: ஜார்க்கண்டில் முட்டி மோதும் கட்சிகள்.. மிக தெளிவாக உள்ள மக்கள்! கள நிலவரம் என்ன?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை நவம்பர் 13ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு ஒரு வழியாகப் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது.. அங்கு இப்போது நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நமது ஒன் இந்தியா குழு களத்தில் இருந்து பதிவு செய்து இருக்கிறது. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஒருங்கிணைந்த பீகார்- ஜார்கண்ட் பிராந்தியத்தின் தொழில்துறை தலைநகராக இருந்த நகரம் தான் ஜாம்ஷெட்பூர்.. இது இப்போது தேர்தல் ஹாட்ஸ்பாடாக மாறி இருக்கிறது. இந்த நகரம் ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் ஜாம்ஷெட்பூர் மேற்கு என்று இரு சட்டசபை தொகுதிகளைக் கொண்டுள்ள நிலையில், இரண்டிலும் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

கள நிலவரம் என்ன: ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டாக்டர் அஜய் குமார் களத்தில் இருக்கிறார். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவர். மறுபுறம் பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸின் மருமகள் பூர்ணிமா சாஹு போட்டியிடுகிறார்.
ஜாம்ஷெட்பூர் மேற்கு தொகுதியில் உள்ளூரில் பிரபலமாக இருக்கும் சர்யு ராய் பாஜக கூட்டணியில் ஜேடியு சார்பில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பன்னா குப்தா போட்டியிடுகிறார்.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜாம்ஷெட்பூரின் புறநகரான ஆதித்யபூரில் பிரச்சாரம் செய்தார். அதற்கு இப்பகுதியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், நகரின் மற்ற பகுதிகளில், பாஜகவின் பிரச்சார ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. அதேநேரம் மறுபுறம் பன்னா குப்தாவும் காங்கிரஸ் தொண்டர்களும் கடைசி வரை வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். டாக்டர் அஜய் குமாரும் கூட உள்ளூரில் பல முக்கிய பகுதிகளில் கடைசிக் கட்ட பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டார்.

பிரச்சாரம்: அஜய் குமாரின் கடைசிக்கட்ட பிரச்சாரம் நடந்த இடத்தில் நமது ஒன்இந்தியா செய்தியாளரும் உடன் இருந்தார். அந்த ரோட்ஷோவில் பல நூறு தொண்டர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்குச் சேவை செய்ய விரும்புவதாகத் தெரிவித்த அஜய்குமார், அங்குள்ள மக்களுக்குத் தரமான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அமைதியான சூழலை வழங்குவதில் கவனம் செலுத்தப் போவதாகக் குறிப்பிட்டார்.
நாம் அங்குள்ள வாக்காளர்கள் உடனும் பேசினோம். ஆனால், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லவே தயங்குகிறார்கள். இருப்பினும், பொதுவாகப் பார்க்கும் போது சிறுபான்மை மக்கள் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்கள். மறுபுறம் தொழில்துறையினர் பாஜக பக்கம் இருப்பது போலத் தெரிகிறது.
மக்கள் நினைப்பது என்ன: அதேபோல இளைஞர்கள் காங்கிரஸில் ஆர்வம் காட்டும் நிலையில், பெண் வாக்காளர்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள்.. அங்கு மாநிலத்தில் சுமார் 26% பேர் குறைந்த வருமானம் கொண்டவர்கள், தலித் மற்றும் பழங்குடி வாக்காளர்கள் ஆவர்.. இவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமையப் போகிறது.
அங்கு ஒரே பகுதியில் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அஜய் குமார் பிரச்சாரத்தை ஒரு பக்கம் கொண்டாடுகிறார்கள் என்றால்.. அதே இடத்தில் மற்றொரு பக்கம் மோடிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.

என்ன நினைக்கிறார்கள்: அங்குள்ள தினேஷ் கிரி என்ற சைக்கிள் ரிக்ஷா இழுப்பவரிடம் நாம் பேசினோம்.. அவருக்கு வேட்பாளர் குறித்து பெரிதாக எந்தவொரு தகவலும் தெரியவில்லை என்ற போதிலும், மோடி நாட்டிற்காக நன்மை செய்கிறார் என்றும் அவரே சரியான தேர்வு என்றும் கூறினார். அங்கு இதுபோல பலரைப் பார்க்க முடிகிறது. வேட்பாளரைத் தாண்டி கட்சிக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஜாம்ஷெட்பூர் ஏற்கனவே ஒரு வளர்ந்த தொழில்துறை நகரம். இதனால் அங்கு உள்கட்டமைப்பில் பிரச்சினை இல்லை. அதேநேரம், பணவீக்கமும் வேலை வாய்ப்பும் அங்குப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஆனாலும், அங்குப் பிரச்சினையைத் தாண்டி மக்கள் சித்தாந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவதைப் பார்க்க முடிகிறது.
அருகிலுள்ள பிர்சாநகரில் உள்ள சஞ்சய் மார்க்கெட்டில், ஜார்கண்டின் பழங்குடி மக்கள் இருக்கிறார். அவர்கள் தலித் (லோஹர்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காடுகளில் இருந்து இலைகளை வாங்கி அதைத் தட்டுக்களாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். தங்களுக்கு அரசின் உதவி மிகக் குறைவாகவே கிடைப்பதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

மற்ற பகுதிகள்: ஜாம்ஷெட்பூர் தாண்டியுள்ள செரைகேலா என்பது கலாச்சார பாரம்பரியம் கொண்ட நகரம். இங்குப் பழங்குடியினர் அதிகம் வசிக்கிறார்கள். பழங்குடியினரின் நில உரிமைகள், பழங்குடியினரின் சுயாட்சி மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பு ஆகியவை அங்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.. வங்கதேச ஊடுருவல் என்பது அங்கு முக்கிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. மேலும், தொழில் மயமாக்கலைத் தடுத்து தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாக்க இப்பகுதி மக்கள் முயல்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் கட்சிகள் இங்குப் பல வாக்குறுதிகளை அள்ளி கொடுக்கிறார்கள். ஒரு பக்கம் பாஜக சட்டவிரோத ஊடுருவல்களைத் தடுப்போம் என்று அளித்துள்ள வாக்குறுதி உள்ளூர் பழங்குடியினர் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதேநேரம் பாஜகவின் யூசிசி மற்றும் என்ஆர்சி திட்டங்களை வைத்து ஜேஎம்எம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இரு கட்சிகளும் இப்பகுதியில் அதிகம் வசிக்கும் பழங்குடியினரையே குறிவைக்கிறார்கள். ஆனால், மக்கள் யாருக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர் என்பது வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?











Click it and Unblock the Notifications