கெத்து காட்டும் இந்தியா.. ஜம்மு காஷ்மீரில் ஆக்டிவேட் ஆன SAM ஏவுகணைகள்.. கதறப்போகும் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றிய பிராந்தியத்தில் தரையில் இருந்து மின்னல் வேகத்தில் வானனை நோக்கி பாய்ந்து இலக்கை தாக்கும் ஏவுகணையை நம் நாடு ஆக்டிவேட் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு பலத்த அடியை கொடுக்கும் இந்த ஏவுகணைகள் எப்படி செயல்படும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்கு பதிலடியாக கடந்த புதன் கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை, ட்ரோன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நம் நாடு அழித்தது.

இதையடுத்து பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்று தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது. பாகிஸ்தான் அனுப்பும் ஏவுகணை, ட்ரோன், போன்ற விமானங்கள் வானிலேயே அழிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் தாக்க முயன்று வருவதால் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் அதனை சுற்றிய பிராந்தியத்தில் Surface to Air Missile சிஸ்டம் என்பது இன்று ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை சுருக்கமாக SAM என்று அழைப்பார்கள்.
அதாவது தரையில் இருந்து வானை நோக்கி இந்த ஏவுகணைகள் செல்லும். இதன்மூலம் வானில் பறக்கும் இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டிடம் பல்வேறு வகையான Surface to Air Missile ரக ஏவுகணைகள் நிறைய உள்ளன.
இந்த ஏவுகணைகளை தரையில் இருந்தும், போர்க்கப்பல்களில் இருந்தும் ஏவ முடியும். அதேபோல் ராணுவத்தினராலும் இந்த ஏவுகணையை பயன்படுத்தி எதிரி நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை அழிக்க முடியும். ஜம்மு காஷ்மீரில் கடல் இல்லை என்பதால் இந்த ஏவுகணையை ராணுவத்தினர் கையாள உள்ளனர்.
நேற்று இரவு முதல் ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில் அதனை அழிக்க இந்த ஏவுகணை என்பது ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு உண்மையில் சிம்ம சொப்பணமாக விளங்கும்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications