புகையிலையால் உண்டாகும் வாய்ப் புற்றுநோய்... 6 மணி நேரத்திற்கு ஒரு இந்தியர் பலியாகிறார்!
டெல்லி: புகையிலை தொடர்பான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இந்தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒருவர் பலியாகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் இந்தியர்களிடையே புகை பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், வாய்ப் புற்றுநோய் தொடர்பான மரணங்களும் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அசோக் தோப்ளே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

வாய்ப்புற்று...
புகையிலையின் தாக்கத்தால் உருவாகும் வாய்ப்புற்று நோயால் இந்தியாவில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கிறார்.

மூன்றில் ஒருவர்...
தென் மாநிலங்களில் மூன்றில் ஒருவர் புகையிலை உள்ளிட்ட மெல்லும் போதைப் பொருட்களை எடுத்துக் கொள்பவராக உள்ளார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புகையிலை ஒழிப்பு...
புகையிலையை முற்றிலுமாக ஒழித்தாலன்றி, இந்த மரண விகிதத்தை தவிர்க்க முடியாது எனக் கூறுகின்றனர் புற்று நோய் ஆராய்ச்சி துறை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும்.

மாற்று ஏற்பாடு...
‘புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் செய்து தந்துவிட்டு, நாடு முழுவதும் புகையிலையை பயிரிடுவதையே முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications