ஆரஞ்ச் அலெர்ட்.. நிரம்புகிறது ஆசியாவின் பெரிய இடுக்கி ஆர்க் அணை.. 26 வருடத்திற்கு பின் திறப்பு!
ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.
Recommended Video

இடுக்கி: ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை, தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.
இதனால் அந்த அணை விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடுக்கியில் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் இடுக்கி அணை 1960களில் கட்டப்பட்டது.
குறவன் குறத்தி என்ற இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.

ஆரஞ்ச் அலெர்ட்
இதன் முழு கொள்ளளவு, 2,403 அடியாகும். தற்போது 2,395 அடியை இந்த அணை எட்டி இருக்கிறது. அங்கு பெய்யும் கனமழையால் இந்த அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இதனால் தற்போது அங்கு ஆரஞ்சு அலெர்ட் எனப்படும், பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.

திறக்கப்பட உள்ளது
ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்ட சில நாட்களில் பெரும்பாலும் இந்த அணை திறக்கப்பட வேண்டும். இதனால் நாளை இந்த அணை திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணை வேகமாக நிரம்பி இருக்கிறது. இதை பார்க்க அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள்.

கடைசியாக எப்போது
மொத்தம் இரண்டு முறை மட்டுமே இந்த அணை திறக்கப்பட்டது. முதல்முறை அணை கட்டப்பட்ட போது 1975ல் சோதனைக்காக திறக்கப்பட்டது. அதன்பின் 1995ல் அணை நிரம்பி திறக்கப்பட்டது. அதன்பின் 26 வருடங்கள் கழித்து இப்போதுதான் அணை திறக்கப்பட உள்ளது. இதனால் இந்த நிகழ்வு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பகுதி
தற்போது இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்ட இருக்கிறது. அதேபோல் இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாட்டு பகுதியிலும் அதிக தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications