மும்பையில் ஒரே ஆண்டில் அபார்ஷன் செய்த 100க்கும் மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள்
மும்பை: 2013-2014ம் ஆண்டில் மும்பையில் 100க்கும் மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கருகலைப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
2013-2014ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எத்தனை பேர் கருகலைப்பு செய்துள்ளனர் என்று விவரத்தை அளிக்குமாறு சேத்தன் கோதாரி என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் மும்பை முனிசிபால் கார்பரேஷனிடம் கேட்டிருந்தார்.
அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அளித்துள்ள பதிலின் விவரம் வருமாறு,

கருகலைப்பு
2013-2014ம் ஆண்டில் மட்டும் மும்பையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருகலைப்பு செய்துள்ளனர். இதில் சிறுமிகளும் அடக்கம்.

சிறுமிகள்
கருகலைப்பு செய்தவர்களில் 100க்கும் மேற்பட்டோர் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் ஆவர். மேலும் 900 பேர் 16 முதல் 19 வயது வரை உள்ளவர்கள்.

டாக்டர்கள்
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோ அல்லது தவறான தொடர்புகள் மூலமாகவோ கர்ப்பம் தரித்ததால் தான் அதை கலைத்துள்ளனர் என்று அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காரணம்
சிறுமிகள் இத்தனை பேர் கருகலைப்பு செய்துள்ளது பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடத்துவது, செக்ஸ் கல்வி பற்றிய விழுப்புணர்வு இல்லாதது மற்றும் பலாத்காரம் செய்யப்படுவது ஆகியவையே குறிக்கிறது என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications