பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 500க்கும் மேற்பட்டோர் காயம்! 8 பேர் நிலை மோசம்
பூரி: ஒடிசா மாநிலம் பூரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரையின்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 8 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான பூரியில் ஜெகன்நாதர் கோவில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று.

பூரியில் ஜெகன்நாதர் கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது. ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள்.
பூரி ஜெகன்னாதர் ரத யாத்திரை விழா 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்கியது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் பூரி நகரில் திரண்டனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல்துறையின் 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பூரி ரத யாத்திரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலானோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications